மலையக தோட்டப்புறங்களில் இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சி - இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு
sri lanka
army
V. Rathakirushnan
By Vanan
சிறிலங்கா இராணுவத்தை மலையக தோட்டப்புறங்களில் நிலைநிறுத்த பெருந்தோட்ட நிர்வாகங்கள் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்(V. Rathakirushnan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அவதானம் செலுத்த வேண்டும் என, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன, அவ்வாறான எந்தத் தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லையென குறிப்பிட்டார்.