கோட்டை நீதவானை கொலை செய்ய முயற்சி: அமைச்சர் விடுத்த அதிரடி பணிப்புரை
கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சிப்பதாக உளவாளி ஒருவர் வழங்கிய கடிதமொன்றுக்கு அமைய பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
காரணம்
நீதவானைக் கொலை செய்வதற்கு துப்பாக்கியை வழங்குமாறு தொலைபேசியில் நபர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த உளவாளி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திலின கமகே கடந்த காலங்களில் வழங்கிய பல நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாகவே அவரைக் கொல்ல இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை
இந்நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபரிடம் பணிப்புரை பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த உளவு கடிதத்தில் துப்பாக்கியை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுத்த நபரின் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |