அட்டுலுகம சிறுமி ஆய்ஷாவின் படுகொலை! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்
அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அட்டுலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழி இறைச்சி விற்கும் கடையில் இறைச்சி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார்.
அதனையடுத்து படுகொலை தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த நபர் தான் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டிருந்தார்.
குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இவ்வாறு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்,
படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள் (காணொளி)
படுகொலை செய்யப்பட்ட ஆயிஷா: குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
