கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென அகற்றப்பட்ட பாதுகாப்பு சோதனை இயந்திரங்கள்!
Bandaranaike International Airport
By Kathirpriya
கட்டுநாயக்க விமான நிலைய நுழைவு முனையத்தில் இருந்த அனைத்து பாதுகாப்பு சோதனை இயந்திரங்களும் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் முறையான ஆய்வு இல்லாமல் இந்த பணி நடந்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச விமான நிலையங்களில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இது தொடர்பான மேலும் பல செய்திகளை காண்பதற்கு ஐபிசி தமிழின் காலை நேர செய்தித் தொகுப்பை பார்வையிடுங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்