கனடாவில் தோன்றிய அதிசய ஒளி! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்
கனடாவின் வான் வெளியில் எதிர்பாராத விதமாக அரோரா தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
பொதுவாக இந்த அரோரா ஒளி பூமியின் வட மற்றும் தென் துருவத்தில் மட்டுமே தோன்றும் நிலையில், வட துருவத்தை ஒட்டியுள்ள கனடாவில் கடந்த 8ஆம் திகதி உருவாகியுள்ளது.
இதே திகதியில் சூரியப் புயல் பூமியை கடந்து சென்ற நிலையில் இந்த ஒளித் தோற்றம் உருவாகியுள்ளது.
இந்த ஒளித் தோற்றம் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்துள்ளதுடன், ஊதா நிறத்தை ஏற்படுத்தியுள்ளதாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சுமார் 3000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பூமியின் காந்த மண்டலத்தில் பயணிக்கும் சூரிய கதிர்கள் அங்குள்ள வாயுக்களோடு வினைபுரிந்து இந்த நிறத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரல்
இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
இவ்வாறான அரோரா நடனங்கள் முதன் முதலாக 1859ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதியும், இதனையடுத்து அதே ஆண்டில் செப்டம்பர் 2ஆம் திகதியும் பதிவு செய்யப்பட்டன.
இதில் செப்டம்பர் மாதம் தோன்றிய ஒளியானது மிகவும் பிரகாசமாக இருந்ததாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்த மக்களும், கப்பல் மாலுமிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.