உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் வெளிவரவுள்ள புதிய தகவல்கள்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம் என சிறிலங்காவின் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வுசெய்து விசாரணை மேற்கொள்ள ஒரு ஆணைக்குழுவே அமைக்கப்பட்டிருந்தது.
அந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனப்தசில்வா,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்சங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜபக்ஸ், மேல் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அத்தபத்து லியனகே, ஓய்வுபெற்ற அமைச்சு செயலாளர் டபிள்யூ.என்,எம்,ஆர்.அதிகாரி ஆகியோர் அடங்குகின்றளர்.
அந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை 2021 02,25அம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
விசாணை ஆணைக்குழு
மேலும் விசாணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதுதொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
அதன் பிரகாரம் சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்படும் இறுதி பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் அரசாங்கம் பின்வாங்காமல் நடவடிக்கை எடுக்கும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழுவினால் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலாேசனையின் பிரகாரம் முறையாக செயற்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
