ரணில் - சஜிதால் பின்தள்ளப்பட்ட இலங்கை! ஆளும் தரப்பு காட்டம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய பாதுகாப்பை விளிம்பிற்கு கொண்டு வந்த தலைவர்கள் என சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விவாதத்தின் போது தனது கருத்துக்களைத் தெரிவித்த அவர் மேலும், கூறுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் மனசாட்சியில் ஒரு ஓட்டை. இங்கு உண்மையான நிர்வாகிகள் நீதித்துறை செயல்முறை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழ்நிலையை ராஜபக்சர்கள் உருவாக்க விரும்பினர்.
இதனால் ரணிலுக்கும் மைத்ரிக்கும் இடையே ஒரு அரசியல் விரோதம் உருவாக்கப்பட்டது,
2013 முதல் ராஜபக்சர்க்கள் இனவெறி சிங்கள மற்றும் முஸ்லிம் குழுக்களை உருவாக்கினர். ஆரம்பத்தில் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு உருவாக்கப்பட்டது. அந்த அரசியல் குற்றவாளிகளுடன் நாம் கைதட்டும்போது.
பிரபாகரனின் ஆயுதங்கள்
மேலும், பிரபாகரனின் ஆயுதங்கள் கொள்கலன்களில் இருந்ததாக நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கூறியவர்களுகளை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது, எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் பிமல் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அதன்போது, இது உண்மையான குற்றச்சாட்டாக இருக்குமானால், குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க தயங்க வேண்டாம் எனவும், பொய் கூறியதாக இருந்தால் அதைத் தெளிவாக ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம்
அவர் மேலும் கூறியதாவது, “323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. ஜனவரி மாதத்தில் அந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையவை என்று அனைவரும் கூறினர்.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர், ஐந்து மாதங்கள் கழித்து என்னை குற்றம் கூறுகிறார்கள், நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.
அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை.
கீழ்த்தரமான செயற்பாடு
பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது.நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள்.இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும்.
பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். கீழ்த்தரமான செயற்பாடு தற்போது வெளிப்பட்டவுடன் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்” என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அநுர அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களிலும் பிரபாகரனின் ஆயுதங்களே இருந்தன என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அண்மையில் தெரிவித்திருந்ததன் அடிப்படையில் அமைச்சர் பிமலின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
