யுத்தத்தில் மக்களை கொன்றது விடுதலைப் புலிகளாம்: இராணுவத்தை ஆதரிக்கும் மகிந்தவின் சகா
சிறிலங்காவில் (Sri Lanka) நடைபெற்ற யுத்தத்தின் போது புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களை கொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.” என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “போர் காலத்தில் நீலம் திருச்செல்வம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத நடவடிக்கை
அதிகளவான தமிழர்களை புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
கொழும்பில் கொலைசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களுள் பெரும்பாலானவர்களை புலிகளே கொன்றனர். துரையப்பாவை கொன்றதும் புலிகள்தான்.
யாழில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அனுமதிக்காத சமாதானத்தை கோரிய மக்களை கொன்றதும் அவர்கள்தான். அரசியல் இலாபத்துக்காக அதை (செம்மணியை) பயன்படுத்தக்கூடும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாடாளுமன்றம் வந்தார். இராணுவத்தக்கு எதிராக கூட்டமைப்பினர் மற்றும் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாமல் அதனை மறுத்தார். ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை. இது தவறாகும்.” என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
