இலங்கை யுத்த மீறலின் மையப் புள்ளிகள்! வாய்ப்புக்காக காத்திருக்கும் ஐ.நாவின் ஆவணங்கள்
இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை ஆதரிப்பது தொடர்பாக ஐநாவால் எழுந்த சர்ச்சைகள், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பரந்த விவாதங்களுடன் இணைந்தவை.
ஐநாவின் அறிக்கைகள் மற்றும் தலையீடுகள், உள்நாட்டு வன்முறைகளை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், பாலியல் வன்முறைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் மோசமடைந்த சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தன.
இந்த விவகாரம் ஐ.நாவின் பிரதிநிதி அண்மையில் செம்மணிக்கு விஜயம் செய்த பின்னணியிலும் வியாபித்திருந்தது.
இருந்தாலும், இது உள்நாட்டு பொறிமுறையை அடிப்படையாக கொண்டது என்றும், இதற்கு ஆதரவாக சர்வதேசத்தின் உதவியை நாடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அவ்வாறென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளையும் சாட்சிகளையும் ஐ.நா திரட்டிவைத்திருப்பதன் நோக்கம் என்ன?
அவ்வாறு ஐ.நா சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரித்து வைத்துள்ளது இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு சிக்களை உருவாக்கும் என்றால் அதனை எவ்வாறு அணைத்துலக பரிமாற்றத்திற்கு கொண்டுசெல்ல முடியும்
இவ்வாறான இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் ஐ.நாவின் நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது சிரேஷ்ட மூத்த ஊடகவியலாளர் நிலாந்தனின் தொடரும் நேர்காணல்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
