இலங்கையிலிருந்து சென்றவரால் ஆபத்துக்குள்ளாகியுள்ள அவுஸ்திரேலியா
covid
srilanka
austrlia
By Sumithiran
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் புதியவகை ‘டெல்டா’ அல்லது இந்திய வகை கொரோனா பரவியதற்கு இலங்கையர் ஒருவரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகமான 9 நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, கடந்த மாதம் 8ம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நகருக்கு குறித்த நபர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மே மாதம் 8ம் திகதி அவுஸ்திரேலியா சென்றடைந்திருந்த நிலையில் அதே தினம் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, மெல்பேர்ன் நகரில் கொரோனா தொற்று அதிகரித்ததன் பின்னணியில் மே மாதம் 27ம் திகதி லொக்டவுண் அறிவிக்கப்பட்டிருந்ததுடன் இவ்வாரம் அது நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்