முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் அபார பந்துவீச்சில் சுருண்ட ஆஸி அணி..!
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய துடுப்பாட்ட அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியா- அவுஸ்திரேலிய இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று (9) ஆரம்பமானது.
இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது.
ஜடேஜா

அதன்படி, அவுஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு மூலம் 63.5 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்குள் சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது.
இந்திய அணி சார்பில் விக்கெட் காப்பாளர் கே.எஸ்.பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் விளையாடுகின்றனர்.
இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 ஆட்டமிழப்புகளையும் , அஸ்வின் 3 ஆட்டமிழப்புகளையும் , ஷமி, சிராஜ் தலா ஒரு ஆட்டமிழப்புயும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (wc), பாட் கம்மின்ஸ் (c), நாதன் லியான், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்.
இந்தியா : ரோகித் சர்மா (c), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத் (wc), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.