சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்து பதிலளித்துள்ள அவுஸ்ரேலியா!
சீனாவில் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளது.
இதனால் பல நாடுகள் கோவிட் சோதனைகளையும் சுகாதார கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
நாட்டிற்குள் வரும் சீனப்பிரஜைகளுக்கு எதிராக சில நாடுகள் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானித்துள்ளது.
எச்சரிக்கை
தமது பிரஜைகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நாடுகளுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்போம் என சீனா எச்சரித்துள்ளது.
இருப்பினும் சீனாவின் குறித்த எச்சரிக்கைக்கு அவுஸ்ரேலியா தனது பதிலை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பதில்
சீனாவின் குறித்த எச்சரிக்கை தொடர்பில் அவுஸ்திரேலியா கவலை அடையப்போவதில்லை என அவுஸ்ரேலியாவின் திறைசேரி விவகாரங்களிற்கான அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா அலையின் பரவல் சீனாவில் உச்சம் பெற்றுள்ளதால், பெருந்தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான சுகாதார நடைமுறைகளை கையாள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அவுஸ்ரேலியாவின் புதிய சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ் பதிலளித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
