ரஷ்யாவை குற்றம் சாட்டும் அவுஸ்திரேலியா...!
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இதனை அறிவித்துள்ளார்.
நவால்னியின் மரணம்
அத்துடன், நவால்னியின் மரணம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மனித உரிமைகளை மோசமாக மீறியவர்களை பொறுப்புக்கூறச் செய்வதை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளாக அவுஸ்திரேலிய தடைகளை விதித்துள்ளதென அவர் கூறியுள்ளார்.
மரணத்துக்கான நீதி
அத்துடன், நவால்னியின் மரணத்திற்கு காரணமானவர்களும் ரஷ்ய அரசாங்கமும் பொறுப்புக்கூறுவதை உறுதி படுத்துவதற்காக அவுஸ்திரேலிய சக நாடுகளுடன் இணைந்து செயற்படும் எனவும் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவால்னி நடத்தப்பட்ட விதம் மற்றும் அவரது மரணத்திற்கு, ரஷ்ய அதிபரும் அரசாங்கமுமே காரணம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு இது குறித்து சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |