அவுஸ்திரேலியா கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையில் இருந்து சென்றவர் பலி!
அவுஸ்திரேலியா போண்டி சந்தி வெஸ்ட்ஃபீல்ட் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் அடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
போண்டி சந்தி வெஸ்ட்ஃபீல்டில் பாதுகாவலராகப் பணியாற்றிய 30 வயதான முன்னாள் அகதி, சனிக்கிழமையன்று(13) நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரே ஆண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் 6 பேர் பலியாகினர். குறித்த சம்பவமானது கடந்த(13) ஆம் திகதி சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவில் நடந்த கொடூரம்
குறித்த தாக்குதலில் 5 பெண்களும் ஒரு ஆணும் பலியாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன. அதில் பலியான ஆண் நபரே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 30 வயதான ஃபராஸ் தாஹிர், பாகிஸ்தானில் இருந்து UNHCR வழியாக இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்பு அவுஸ்திரேலியா வந்தடைந்துள்ளார். அங்கு அவரது பெற்றோர்கள் இன்னும் வசிக்கின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |