ஈரானின் தாக்குதலை முறியடித்த அமெரிக்கா!
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 80 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கி அழித்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் ஏமனில் இருந்து ஏவப்பட்ட குறைந்தபட்சம் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், 80 இற்கும் மேற்பட்ட ஒரு வழி தாக்குதல் ஆளில்லா ஏரியல் வாகனங்கள் (OWA UAV) ஆகிய தடுத்து அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தூதரகம்
இதனடிப்படையில் அவர்களது இருப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழித்து வருகின்ற நிலையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியபோது எதிர்பாராத விதமாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது.

இதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில் நேற்று(14) ஈரான் நேரடியாக டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஏவுகணைகள்
இதற்காக 300 இற்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.

இஸ்ரேல் ஏற்கனவே வான் எல்லைகளில் எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்ததால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்தது.
அமெரிக்க அதிபர்
இதனால் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் இஸ்ரேல் சிறப்பாக எதிர்கொண்டு தடுத்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தாங்கள் உதவியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஈரானின் தொடர்ச்சியான இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையிலான மோசமான மற்றும் பொறுப்பற்ற நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்