இஸ்ரேல் மீதான தாக்குதல் முடங்க வேண்டும்: அவுஸ்திரேலியா கோரிக்கை
இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கோரிக்கையை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்( Penny Wong) முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், சமூக ஊடக பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பதற்ற நிலை
அத்தோடு பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் மற்றும் பதற்ற நிலையை அதிகரிக்ககூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளவுள்ளது என வெளியாகும் அறிகுறிகள் குறித்து அவுஸ்திரேலியா கடும் கரிசணை கொண்டுள்ளதாக பெனிவொங் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |