இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னாருக்கு விஜயம்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று (28) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.
குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்கலாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பல தரப்பினருடன் கலந்துரையாடல்
இதேவேளை கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுடனும், மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எண்ணக் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
மேலும் மன்னாரில் இடம்பெறும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளும் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |