பெண் ஊழியரின் குற்றச்சாட்டு -அவுஸ்ரேலிய கல்வி அமைச்சரின் பதவி பறிப்பு
Alan Tudge
education ministe
Abuse Claim
By Sumithiran
முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில், அவுஸ்ரேலியே கல்வி அமைச்சர் பதவி விலக, அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் உத்தரவிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியே நாடாளுமன்றத்தில், மூன்றில் இருபங்கு பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, ஓரிரு நாட்களுக்கு முன்பு, தகவல் வெளியானது.
இந்நிலையில், 2017-ல் அமைச்சர் அலன் டட்ஜுடன், ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, அவர் தன்னை இடுப்பில் எட்டி உதைத்ததாக, முன்னாள் ஊழியர் ரச்சேல் மில்லர் என்பவர் புகார் அளித்த நிலையில், இதுதொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் வகையில், அமைச்சரை தற்காலிகமாக பதவி விலக, பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதை நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், தனது அறிவுறுத்தலை அலன் டட்ஜ் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்