யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து : பெண் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துக்கும் முச்சக்கரவண்டிக்கும் இடையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (19) காலை அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் அதே திசையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றநது.
விபத்து தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |