முட்டைகளை இறக்குமதி செய்தால் ஏவியன் இன்புளுவன்சா தாக்கும் - இலங்கைக்கு எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
வைரஸ்
முறையான கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையானது நாட்டுக்கு பறவைக் காய்ச்சல் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.
இறக்குமதி தீர்மானம்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை, கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள், கால்நடை புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வைரஸைத் தடுக்க எடுத்த கூட்டு முயற்சிகள், அரசாங்கத்தின் இந்த இறக்குமதி தீர்மானத்தினால் பாதாளத்துக்கு போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்