தமிழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறல் - விரைந்து தடுத்த மனோ கணேசன்
அவிசாவளை பென்றித் தோட்ட தமிழ் மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சனைக்கு தான் தீர்ப்பளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் தனியார் நிறுவனமொன்று மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அங்கு களப் பயணம் மேற்கொண்ட போதே, அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியின் போது அவிசாவளை பென்றித் தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் அங்கு விபத்து ஏற்பட்டு, அயல் குடியிருப்பு மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து தாம் கள பயணம் செய்ததாகவும் இது தொடர்பில் அவிசாவளை பிரதேச செயலாளரிடம் கலந்துரையாடியாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதேச செயலாளர் தனது கடமையை சரிவர செய்யத் தவறியுள்ளதாகம் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், இந்தக் காணியில் தனியார் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.