புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கல்வித் துறையினருக்கு விழிப்புணர்வு!
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்து கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை தெளிவுபடுத்தும் நாடளாவிய தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, நாடளாவிய ரீதியில் 100 மையங்களில் அனைத்துக் கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கான 2 நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நேற்று (12) மற்றும் இன்று (13) ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது.
இதன் 2ஆம் கட்டமாக, அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில், நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விசேட பயிற்சித் திட்டம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படும்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள்
இதன் 3ஆம் கட்டமாக, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடசாலை மட்டத்தில் பெற்றோர்களைத் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வு வாரம், நவம்பர் 30 முதல் டிசம்பர் 04 வரை ஒதுக்கப்பட்டு, அனைத்துப் பெற்றோர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு, பாடசாலை சார்ந்த மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைகள் குறித்துத் தெளிவுபடுத்தல், கல்வி நிர்வாகம் மற்றும் பௌதிக வளங்களை மேம்படுத்துதல், கல்விக் கட்டமைப்பின் அனைத்துத் தரப்பினருக்கும் புதிய சீர்திருத்தங்கள் குறித்த தெளிவான புரிதலை வழங்குதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |