யாழில் மது பாவனை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு(படங்கள்)
பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்தின் அனுசரணையில் வலிவடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான மது பாவனை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
அதேவேளை, பொருளாதாரத்தில் நலிவுற்ற தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் (26) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
சர்வோதய யாழ் மாவட்ட இணைப்பாளர் சி.யுகேந்திரா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியத்தலைவரும் லண்டன் வோர் கஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய அறங்காவலரும் ஆகிய மு.கோபாலகிருஷ்ணர் தமிழரசு கட்சித் தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வடமாகாண பிரதேச சபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.சுகிர்தாதேவி ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பிரதேச சமூக மட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்