ஒளிவெள்ளத்தில் ராம பூமி..! அயோத்தியில் 26 லட்சம் தீபம் ஏற்றி உலக சாதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் அயோத்தி நகரில் ஒரே இடத்தில் 26 இலட்சத்திற்கும் அதிக அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது.
ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி 26 இலட்சத்து 17 ஆயிரத்து 215 அகல் விளக்குகளை ஏற்றி இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கின்னஸ் சாதனை
ஏற்றப்பட்ட அகல் விளக்குகளின் எண்ணிக்கையை ட்ரோன் கெமராக்களின் உதவியுடன் கின்னஸ் சாதனை நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, இரண்டாயிரத்து 128 பேர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆரார்த்தி எடுத்தமையும் கின்னஸ் சாதனையாக பதிவாகியுள்ளது.
இரு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களையும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
Link - https://www.youtube.com/watch?v=F1_s8XfLhnc
ராமர் கோவில் கட்டுவதற்கு காரணம்
அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், உலக அரங்கில் உத்தர பிரதேசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அடையாளம் ஒன்றை வடிவமைப்பதில் இந்த திருவிழா ஒரு முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது.
ஸ்ரீராம ஜென்ம பூமியில் ராமர் முன்பு முதல் விளக்கை ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த கால அரசில் அயோத்தியின் ஆன்மீக முக்கியத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டது.
ராம பக்தர்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே கடவுள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் என தெரிவித்தார்.
