கொழும்பிலிருந்து யாழிற்கு போதைப்பொருள் கடத்திய இருவர் கைது
Sri Lanka Police
Colombo
Jaffna
By Theepan
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (09) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி