அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரே மாதத்தில் கிடைத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா..!
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரே மாதத்தில் ரூ.25 கோடி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அறக்கட்டளை பொறுப்பாளர் கூறினார்.
ஒரு மாதத்தில் கிடைத்த நன்கொடை
ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது,
60 லட்சம் பக்தர்கள் தரிசனம்
"ரூ.25 கோடியில் காசோலைகள், வரைவோலைகள் மற்றும் கோயில் அறக்கட்டளை அலுவலகத்தில் வைப்பு செய்யப்பட்ட பணம் மற்றும் நன்கொடை பெட்டிகளில் வைப்பு செய்யப்பட்டவை அடங்கும்.
இருப்பினும், அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செய்யப்படும் ஒன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |