கொரிய தீபகற்பத்தில் B-52H விமானங்கள்! வடகொரியாவுக்கு சவால் விடும் அமெரிக்க கூட்டணி
தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை B-52H குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி வான்பயிற்சி நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்படி ஜூலை 11, 2025 அன்று கூட்டு வான்பயிற்சியை B-2 Spirit விமானங்களை பயன்படுத்தி நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றன.
B-2 Spirit ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மிகவும் மேம்பட்ட, ரேடாரில் புலப்படாத தொழில்நுட்பம் கொண்டவை.
B-2 விமானங்கள்
இவை முக்கியமாக அமெரிக்காவின் நீண்ட தூர தாக்குதல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மாறாக, B-2 விமானங்கள் ஜூன் 2025-ல் ஈரானின் அணு வசதிகள் மீதான "Operation Midnight Hammer" தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பயிற்சி வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு வலுவான செய்தியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று நாடுகளின் இராணுவத் தலைவர்களான தென் கொரியாவின் கிம் மியுங்-சூ, அமெரிக்காவின் டான் கெய்ன் மற்றும் ஜப்பானின் யோஷிடா யோஷிஹிடே ஆகியோர் சியோலில் சந்தித்து, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இதன்படி இந்தப் பயிற்சி 2025-ல் B-52H குண்டுவீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்திற்கு அருகில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
