2023 இல் காத்திருக்கும் பேரதிர்ச்சி - துல்லியமாக கணித்த பாபா வங்கா
2023 முதல் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் என அனைத்தையும் பெற்றோரே முடிவு செய்வார்கள் என பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்றால் போல், எக்டோ லைப் என்ற தனியார் நிறுவனம் பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பையை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும் எனவும் பாபா வங்காவின் கணிப்பு போல் அவர்களுடைய பிள்ளைகளின் தோல், நிறம் மற்றும் அவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் பெற்றோரே முடிவு பண்ணலாம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அறிவியலின் வளர்ச்சி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை இடம் பெறும் எனவும் இதன் மூலம் மனிதர்கள் 100 வயது கடந்து உயிர்வாழ்வார்கள் எனவும் பாபா வாங்கா தெரிவித்துள்ளார்
இதுவரை கணித்தவை
உலகம் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதையும் கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில்,தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையின் பெரும்பகுதி இந்த ஆண்டு அதிக மழை மற்றும் வெள்ளத்தை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதுபோன்றே நடந்துள்ளது.
பெரு நகரங்கள் வறட்சியால் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அல்லல்படும் என்றார். தற்போது உலகின் மிகப்பெரிய நகரங்கள் தண்ணீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுடன், தண்ணீர் வீணாக்கும் செயலுக்கு அபராதமும் விதித்துள்ளது.
இந்தியாவில் பஞ்சம்
மேலும், கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் எனவும். இதனால் வெட்டுக்கிளி கூட்டம் உள்ளே புகுந்து நாசத்தை ஏற்படுத்தும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதேவேளை, உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், அடுத்த ஆண்டான 2023 தொடர்பிலும் பல கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.
ஆய்வகங்களில் குழந்தை பிறப்பு
அதில் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமன்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் அதனை பயன்படுத்தும் என அவர் கணித்துள்ளார்.
அதேவேளை, 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2023 முதல் இனி பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்நிலையில், 2022 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பில் இரண்டு நிறைவேறியதாகவே கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அவர் கணித்திருந்தார். அத்துடன் இத்தாலியில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்படும் எனவும் நீர் நிலைகள் வரண்டு போகும் எனவும் பாபா வங்கா கணித்திருந்தார்.
