பாபா வங்காவின் நிறைவேறிய மற்றுமொரு கணிப்பு: ஆச்சரியத்தில் நிபுணர்கள்
எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனது சிறு வயதில் கண் பார்வை இழந்த பாபா வாங்கா இதுவரை கணித்த உலகின் மிக பெரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்தே உள்ளன.
இவர் கணித்த இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விடயங்கள் எல்லாம் நிகழ்ந்தே உள்ளன.
பாபா வங்காவின் புயல் கணிப்பு
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான இவரது கணிப்புகள் தற்போது பேசு பொருளாகி வருகின்றது.
1996ல் பாபா வாங்கா மரணமடைந்திருந்தாலும், அவர் 5079ம் ஆண்டு வரையான கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.
அந்தவகையில் 2023இல் சூரிய புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள நிலையில் அந்த தகவல் தற்போது உண்மையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சூரியப் புயலானது டிசம்பர் 1ம் திகதி நண்பகலில் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
சூரிய ஒளி மற்றும் பெருமளவில் கரோனல் வெளியேற்றங்கள் சூரியனின் மேற்பரப்பில் நிகழும்போது சூரியப் புயல் உருவாகிறது.
சூரியப் புயல் ஏற்பட இருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சிலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் பாபா வங்கா கணித்தது போன்று, பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 2023ல் சூரியப் புயல் ஏற்படும் என பாபா வங்கா கணிப்பு மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |