இலங்கைக்கு வந்து குவியப்போகும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு இந்த வருடம் மட்டும் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாக 1.75 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறை வருமானம்
இலங்கையானது சுற்றுலா துறை மூலம் பெருமளவில் வருமானம் பெறு ம் ஒரு நாடாகும். இதற்கமைய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
2019 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலினால் ஏற்பட்ட தாக்கத்தினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தது.
அதனை தொடர்ந்து நாட்டில் உலகளாவிய ரீதியில் பரவிய கோவிட் 19 பெருந்தொற்றினாலும் இலங்கையின் சுற்றுலாதுறை வருவாய் கணிசமான அளவில் குறைந்தது.
நிதி நெருக்கடி
இதனால் இலங்கை அரசு கடந்த ஆண்டு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
இந்நிலையில் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்கின்றது.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க அமைச்சரவை முடிவு செய்தது.
இலவச சுற்றுலா விசா
இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அவர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலவச சுற்றுலா விசாவைப் பெறுவார்கள் என்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த சுற்றுலாத்துறை வருமானம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |