நிஜமான பாபா வங்காவின் 2 கணிப்புக்கள்...! அடுத்தது புடினின் பதவி விலகல்
பல்வேறு உலகச் சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டைப் பற்றி கணித்துள்ள செய்திகள் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
அவர் கூறிய கணிப்புகளில் 2 சம்பவங்கள் ஏற்கனவே நடந்துவிட்டதாகவும், இன்னும் 3 அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 இல் உலகம் முழுவதும் பெரும் நிலநடுக்கங்கள், வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் தாக்கும் எனக் கணித்திருந்தார்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மார்ச் மாதத்தில் மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஐரோப்பாவில் வீசிய கடும் வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீச் சம்பவங்களை இதனுடன் தொடர்படுத்தி கருத்துக்கள் வெளியானது.

இதையடுத்து தொழில்நுட்பம் மனிதர்களை மீறி வளர்ச்சி அடையும் எனக் கூறியிருந்தார்.
இதனடிப்படையில் தற்போதைய சூழலில் AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், மனித வேலைவாய்ப்புகளை அது ஆக்கிரமித்து வருவதும் இக்கணிப்பை உறுதிப்படுத்துவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
வல்லரசு நாடுகள்
இந்த பிண்ணனியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு இடையே முற்றிவரும் பதற்றம் உலகப் போராக வெடிக்கும் எனக் கணித்துள்ளார்.
குறிப்பாகத் தைவான் விவகாரத்தில் சீனாவின் தலையீடும், ரஷ்யா-அமெரிக்கா நேரடி மோதலும் இதற்குக் காரணமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் நவம்பர் 2026-க்குள் பூமிக்கு மேல் ஒரு பெரிய விண்கலம் வரும் என்றும், மனிதகுலம் முதன்முறையாக ஏலியன்களுடன் நேரடித் தொடர்புகொள்ளும் என்றும் கணித்துள்ளார்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அதிகாரத்தை இழந்து, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய தலைவரிடம் ஆட்சிப் பொறுப்பு மாறும் எனவும் அவர் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |