நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது குழந்தை பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற சிறு குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
குறித்த துயர சம்பவம் நேற்று (08) சிகிரியா காவல்துறை பிரிவின் அவுடங்காவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்துக்குள்ளான போது, குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

சடலம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக சிகிரியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்