பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் அசமந்த போக்கு : வீதிக்கு வந்த வியாபாரிகள்!
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி (Pachchilaipalli )பிரதேச சபைக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்கள் ஒழுங்கான பராமரிப்பின்றி காணப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அங்கு இன்று (27.04.2025) காலை பதற்றமான நிலை காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், பளை பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது மலசல கூடமானது பராமரிப்பின்றி அசுத்தமான நிலையில் காணப்படுகின்றது.
பிரதேச சபையின் அசமந்தம்
அதாவது மலசலகூடம் நிரம்பிய நிலையில் காணப்படுவதுடன் அதனை பிரதேச சபை சுத்தம் செய்யாமல் மரப்பலகைகள் மற்றும் கடதாசி தாள்கள் போன்றவற்றை கொண்டு மூடியுள்ளனர்.
இதனால் பேருந்து தரிப்பிடம் முழுவதும் துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளது.மலசல கூடத்தின் பின்புறப் பகுதி பல காலமாக சுத்தம் செய்யாமல் காணப்படுவதால் அங்கு நீர் தேங்கி நிற்பதுடன் மரங்கள் புற்கள் மற்றும் கழிவு நீர் என்பன அதிக அளவு காணப்படுவதால் நுளம்புகள் பெருகும் அபாயகரமாக காணப்படுகின்றது.
இப்பகுதிகளிலே ஈக்கள் அதிகளவு காணப்படுவதுடன், வியாபாரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஈக்கள் நிற்பதால் அசுத்தமான பொருட்கள் என மரக்றி மீன்கள் என்பவற்றை கொள்வனவு செய்ய அச்சப்படுகின்றனர்.
மேலும் பிரதேச சபை பல தடவை தமக்கு வாக்குறுதி கொடுத்தும் தாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பிரதேச சபையில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.
மேலும் பொதுச்சந்தை கட்டடத் தொகுதியின் நடுப்பகுதியில் தற்பொழுது பெய்த மழை காரணத்தால் நீர் தேங்கி நிற்பதுடன் சந்தைக்குள் வரும் வாடிக்கையாளர்கள் பாரிய சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this


