தலைவர் பிரபாகரன் அதிர்வின் பின்னணி
தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ நெடுமாறன் தெரிவித்த கருத்து இலங்கையில் ஓரிரு நாட்களுடன் அடங்கத் தலைப்பட்டாலும், பாக்கு நீரிணையின் அக்கறையில் இன்னமும் அந்த விடயம் அதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பழ நெடுமாறனின் கருத்தை அடுத்து பிரபாகரன் குறித்த தகவலை மீண்டும் திரட்டிக்கொள்ள இந்திய மத்திய உளவு பிரிவும், தமிழக கியூ பிரிவு காவல்துறையும் நகர்கின்றன.
இதற்கிடையே பழ நெடுமாறன் தெரிவித்த கருத்தின் பின்னணியின் ஒருமுனை, இந்திய மத்திய உளவுப் பிரிவான றோவிடம் இருப்பதான விமர்சனங்களுக்கு மத்தியில், அந்த மையமும் இப்போது “வேலிக்கு ஓணான் சாட்சி” என்ற கோணத்தில் இது தொடர்பான தகவல் திரட்டல்களுக்கு புறப்பட்டு விட்டது.
தமிழக காவல்துறையின் உளவு பிரிவை பொறுத்தவரை இதற்கான விசாரணைகளில் இறங்கியுள்ளது. இதன் அடிப்படையில் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தியதாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கிளறப்பட்டு வருகின்றன.
அதேபோல, பழ நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்திற்குள்ளும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக கியூப் பிரிவு காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறப்பட்ட தகவல்களின் அதிர்வுகள் குறித்த விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீசு்சு,
