நீதிமன்றக் கொலை திட்டமிடப்பட்ட சதி : வெளியாகும் திடுக்கிடும் பின்னணி
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்ட சதி என சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதுடைய சந்தேகநபரை புத்தளம் பாலவி பகுதியில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் பலதரப்பட்ட அரசியல் தலைமைகள் உட்பட பொதுமக்கள் வரை கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட சம்பவமா என்ற ரீதியிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
இதனடிப்படையில், குறித்த கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பில் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
