யாழில் விஷமிகள் செய்த மோசமான செயல் - சிசிடிவி கேமராவில் சிக்கிய இருவர் (படங்கள்)
Police spokesman
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் செயல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில் மண்ணெண்ணெய் எடுத்து இவர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.
சிசிடிவி கேமராவில் பதிவாகிய இரண்டு நபர்களும் பிரதேச மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்குரிய விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி