பேராதனைப் பல்கலை மறுஅறிவித்தல் வரை பூட்டு

Badulla Kandy TN Weather Weather Landslide
By Thulsi Nov 28, 2025 06:49 AM GMT
Report

புதிய இணைப்பு 

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அதேபோல், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிக மழைப்பொழிவு காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை அரச தாவரவியல் பூங்காதற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மக்கள் அவதானம்

அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளதைக் காண முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலை மறுஅறிவித்தல் வரை பூட்டு | Bad Weather 4 Killed 9 Missing In Landslide

அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் (எச்சரிக்கையுடன்) இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நான்காம் இணைப்பு

கண்டி (Kandy) -  கங்கொடவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறைந்தது 17 காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துமவ நிலயைம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் இணைப்பு 

மோசமான காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்துக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு 

நாட்டை பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக பதுளை மாவட்டத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

பேராதனைப் பல்கலை மறுஅறிவித்தல் வரை பூட்டு | Bad Weather 4 Killed 9 Missing In Landslide

இந்த மக்களில் பெரும்பாலோர் வீடுகளில் இருந்தபோது நிலச்சரிவுகளில் புதைந்ததாக நிவாரணக் குழுக்கள் தெரிவிக்கின்றன. 

கந்தகெட்டிய பகுதியில் மூன்று பேர், பதுளை, கந்தபொலவில் ஒருவர், ஹேகொடவில் மூன்று பேர், சொரணாத்தோட்டவில் ஒருவர், தெமோதரவில் ஒருவர், லுனுகலவில் ஒருவர், மடோல்சிமவில் ஆறு பேர் மற்றும் பத்தேவாவில் ஒருவர் என உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் டிட்வா புயல் - தமிழ்நாட்டில் எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் டிட்வா புயல் - தமிழ்நாட்டில் எச்சரிக்கை

இரண்டாம் இணைப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலை மறுஅறிவித்தல் வரை பூட்டு | Bad Weather 4 Killed 9 Missing In Landslide

மேலும், மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

நேற்று (26) ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண்சரிவுகள் பதிவாகி வருவதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கண்டி - உடதும்பர, பாத்த ஹேவாஹெட்ட பகுதியில் இடம்பெற்று மண்சரிவில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் போதைபொருளுடன் பெண் உட்பட ஐவர் அதிரடி கைது

யாழில் போதைபொருளுடன் பெண் உட்பட ஐவர் அதிரடி கைது

முதலாம் இணைப்பு

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் 

இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்: அமைச்சர் பகிரங்கம்

ராஜபக்ச ஆட்சிகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்: அமைச்சர் பகிரங்கம்

கொழும்பு - கண்டி வீதி மூடல்

கொழும்பு - கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு காரணமாக முன்னதாக குறித்த வீதி கனேதென்ன பகுதியில் மூடப்பட்டிருந்தது. 

பின்னர் ஒரு வழி பாதையாக திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அந்த வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி!

முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி!

யாழில் தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுப்பு

யாழில் தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016