கேகாலையில் திடீரென மூடப்பட்ட பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் சில பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேகாலை - தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்றைய தினம் (22) மூடப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளையும் மூடி, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதி
தற்போதுள்ள காலநிலை நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பலத்த மழை காரணமாக கேகாலை - அவிசாவளை வீதி தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |