வடக்கு - கிழக்கில் தொடரும் கன மழை! மக்கள் அவதானம்

Batticaloa Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka Weather
By Harrish Jan 19, 2025 01:56 PM GMT
Report

வடக்கு - கிழக்கில் தொடரும் கன மழையினால் பல பிரதேசங்கள் வெள்ள நீர் மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில்(Jaffna) பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/68 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேரும், ஜே/69 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 49 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஜனாதிபதி அநுர அடுத்து பறக்கப்போகும் வெளிநாடு

ஜனாதிபதி அநுர அடுத்து பறக்கப்போகும் வெளிநாடு

தொடர்ச்சியான கனமழை

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் தொடரும் கன மழை! மக்கள் அவதானம் | Bad Weather Alert North And East Sri Lanka Today

அத்துடன், மன்னார் மாவட்டத்திலும் தொடர்ச்சியான கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா

வவுனியா - பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது.

இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் தொடரும் கன மழை! மக்கள் அவதானம் | Bad Weather Alert North And East Sri Lanka Today

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான் கதவுகள் 6 அங்குலத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நெளுக்குளம் - நேரியகுளம் வீதி ஊடாக பயணிப்பவர்களும் அவதானமாக போக்குவரத்தை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிக்குவார்களா ராஜபக்சர்கள்.!இந்திய புலனாய்வுத் துறை அம்பலப்படுத்திய உண்மை

சிக்குவார்களா ராஜபக்சர்கள்.!இந்திய புலனாய்வுத் துறை அம்பலப்படுத்திய உண்மை

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 9 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் தொடரும் கன மழை! மக்கள் அவதானம் | Bad Weather Alert North And East Sri Lanka Today

தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள நவகிரிகளம், புனானை அணைக்கட்டு, வடமுனைகுளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம், வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்த குளங்களின் தேவைக்கு ஏற்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குளங்கள், நீர் நிலைகள்,கடல் மற்றும் ஆறுகளில் நீராடுவதை தவிர்க்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமான செயற்படுமாறும் மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025