தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Sathangani
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 3,000 ரூபாயால் குறைந்து புதிய விலை 374 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,800 ரூபாயால் குறைந்து 344 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
இந்தநிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்