வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lanka Northern Province of Sri Lanka Srilanka Bus
By Independent Writer Jul 24, 2026 08:09 AM GMT
Report

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

 பயணச்சீட்டு வழங்கப்பட்டிருக்கவில்லை

இதற்கமைவாக, மன்னார் - கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.

வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Penalty Imposed On Bus Has Route Permit From Ntc

இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000 ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள் இடைநிறுத்தம் குறித்து வெளியாகிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள் இடைநிறுத்தம் குறித்து வெளியாகிய அறிவிப்பு

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 

எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Penalty Imposed On Bus Has Route Permit From Ntc

குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள் மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும்'' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! நடக்கும் மோசடி: பணத்தை மீளப் பெறுங்கள்

மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! நடக்கும் மோசடி: பணத்தை மீளப் பெறுங்கள்

செய்தி  - பு.கஜிந்தன், த.பிரதீபன் 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்