பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைதக்கப்பட்டுள்ள பிள்ளையானை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (24) இணையவழி ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது நீதவான் ஏ. தர்ஷினி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் அடிப்படையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலைகள்
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு, கல்லடி முருகன் கோவிலுக்கு அருகில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவரைச் சுட்டுக்கொன்றமை, அதே ஆண்டு மே 22ஆம் திகதி இருவரைக் சுட்டுக்கொன்றமை மற்றும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வவுனியாவில் ஆயுதமேந்திய குழுவினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சான்றுகளைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |