சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

Trincomalee Climate Change Weather Floods In Sri Lanka
By Thulsi Dec 01, 2024 11:12 AM GMT
Report

புதிய இணைப்பு

திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவடிச்சேனை, சேனையூர் பகுதிகளைச் சேர்ந்த 57 குடும்பங்களின் 153 நபர்கள் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெள்ளம் குறைவடைந்து வரும் நிலையில் பலர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாவடிச்சேனை பகுதியிலுள்ள திருகோணமலை - மட்டக்களப்பு வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பரவிச் செல்வதனால் வாகனங்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காண முடிந்ததாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்றையதினம் இவ் வீதியில் ஏற்கனவே இருந்ததைவிட நீர் பிரவாகம் குறைவடைந்துள்ளதுடன் வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை, சேனையூர், வட்டவன், பூநகர் பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் பலவவும் நீரில் மூழ்கியுள்ளன.

வயல் நிலங்கள் பாதிப்பு

வெள்ள அனர்த்தத்தினால் தமது வீடுகள், வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் இந்த நிலைமை ஏற்படுவதாகவும் தமது பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

இதேவேளை இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி வெருகல் - மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், ”வெள்ள அனர்த்தத்தினால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு இடைத்தங்கல் முகாம்கள் இருந்தன. தற்போது வெள்ளம் குறைவடைந்துள்ளது.

இங்கு தற்போது 57 குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு சகல அமைப்புகளும் உதவி செய்கின்றன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் அதேபோன்று விவசாயத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் அரசாங்கத்தினால் நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்“ என தெரிவித்தார்.

மூன்றாம் இணைப்பு 

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நேரில் சென்று நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் (Shanmugam Kugathasan) பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட கள்ளம்பற்றை திரியாய், குச்சவெளி, பெரியகுளம், பாலம் போட்டாரு, பத்தினி புரம், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் தற்காலிக முகாம்களை பார்வையிட்டு அங்கிருக்கும் தேவைகளை கேட்டறிந்து நிவாரணப் பணிகளை அவர் துரிதப்படுத்தினார்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கி வருகின்றனர். 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: தொடர்ந்தும் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: தொடர்ந்தும் போக்குவரத்து பாதிப்பு

இரண்டாம் இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்இ நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

முதலாம் இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாழக்கிழமை (28) வரை 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி (Chaminda Hettiarachchi) தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

சமைத்த உணவு

இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம். குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் கடலுக்குச் சென்ற உயிரிழந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச செயலக ஊழியர்கள், முப்படையினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் சமய சமூக அமைப்புக்கள் என அனைவரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மகாவெலி ஆற்றின் பெருக்கெடுப்பால், கூடிய கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை ஆயத்து நிலைகளை தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

மேலும் வெள்ள நீர் தேங்க நிற்கின்ற இடங்களில் இருந்து நீரை கடலுக்குள் வெளியேற்றுவதற்கு உரிய சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு | Bad Weather And Flood In Trincomalee

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆணின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆணின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016