மட்டக்களப்பை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: தொடர்ந்தும் போக்குவரத்து பாதிப்பு
Batticaloa
Sri Lankan Peoples
Floods In Sri Lanka
By Dilakshan
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளநீர் கடலை நோக்கி வழிந்தோடி வருகின்ற நிலையிலும் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்துக்கள் இன்று வரையிலும் தடைப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பட்டிருப்பு பெரியபோரதீவு பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ளம் சற்று வற்றியுள்ளதனால் அவ்வீதியுடாக மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓரளவு போக்குரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைவீழ்ச்சி
வெள்ளப்பெருக்கினால் சில சிறியகுளக்கட்டுக்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், பல வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும், வெள்ளத்தில் அள்ளுண்டுபோயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1885.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி