இலங்கையை சூழ்ந்த மோசமான வானிலை

Weather Floods In Sri Lanka Rain Landslide
By Dharu Aug 03, 2026 01:16 PM GMT
Report

06.15 UPDATE

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வானிலை தொடர்பான சம்பவங்களால் ஆறு பேர் காணாமல் போனதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார்.

05.15PM UPDATE

பொல்பிட்டியாவில் ஒரு வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மேலும் மூவரைக் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

03.09PM UPDATE

நீர்ப்பாசனத் திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

03.00PM UPDATE

கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வாயில்களை படிப்படியாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை, தெரிவித்துள்ளது. 

வினாடிக்கு சுமார் 250 கனஅடி நீர் கொத்மலை ஓயா ஆற்றில் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

02.47PM UPDATE

நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பாடசாலைகளும் நாளை (04) மூடல்.

02.30PM UPDATE

அடுத்த சில மணி நேரங்களில் கலு கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

02.10PM UPDATE

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) மூடப்படும் என நுவரெலியா கல்விப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

02.04PM - UPDATE

அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆக்ரா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை .

01.53PM - UPDATE

மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்புகள், மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் உள்ளது என்று அது தெரிவித்தது.

01.47PM - UPDATE

மத்திய மலையகப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

01.47PM - UPDATE

நிலச்சரிவு காரணமாக கண்டி – கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

01.47PM - UPDATE

மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

12.47PM - UPDATE

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும்,  மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்3 வான் கதவுகள் இன்று (03) அதிகாலை தானாகத் திறக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025