நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு பரவும் அபாயம்
இலங்கையில் (Sri Lanka) நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் (Dengue fever) பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 227 டெங்கு நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள்
அந்த அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 234 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்த மாதத்தின் இதுரையான காலப்பகுதியில் 1,954 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு (Colombo) மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 ஆயிரத்து 183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டம்
கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்த படியாக யாழ் மாவட்டத்திலேயே (Jaffna) அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்