நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளது.
அந்தவகையில், நுவரெலியா (Nuwara Eliya)மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக நுவரெலியா கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் பிரதான வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.அத்துடன் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் 03 பகுதியில் தாழ்நிலப் பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டதன் காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
