அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தொடரும் சீரற்ற காலநிலை
Sri Lankan Peoples
Climate Change
Weather
By Dhilak
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களனி, களு, நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள வெள்ள நிலைமை தொடர்கின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் களனி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு
நேற்றையதினம் வரக்காபொல பிரதேசத்தில் சுமார் 246.5 மி.மீ அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, மேல் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நாட்டின் 5 முக்கிய ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்