அமெரிக்காவில் 1600இற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து: நிலவும் சீரற்ற காலநிலை
பாரிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1600 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், அந்நாட்டில் 12 மாகாணங்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கு மொத்தமாக 1,643 விமானங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 1,238 விமானங்கள் தாமதமாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளிர்கால வானிலை
மேலும், டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் தகவலில், இன்று Midwest பகுதியில் உள்ள அசாதாரண வானிலை காரணமாக சில விமான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பிராந்தியத்தில் குளிர்கால வானிலை காரணமாக நாளையும் பாதிப்புகள் நீடிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, Southwest விமான சேவை நிறுவனம் கூறுகையில், கடும் பனிப்புயல் காரணமாக Chicago, Detroit மற்றும் Omaha பகுதிகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
அத்துடன், மேகமூட்டம், பனிமூட்டம் மற்றும் காற்று காரணமாக குறிப்பிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று அமெரிக்காவின் FAA அமைப்பு வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், Southwest விமான சேவை நிறுவனம் இதுவரை 355 விமானங்களை ரத்து செய்துள்ளதுடன் SkyWest நிறுவனம் 275 விமானங்களையும் United விமான சேவை நிறுவனம் 258 விமானங்களையும் இதுவரை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், மொத்தமாக 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |