கனடாவில் அடித்த அதிஷ்டம்! கோடிகளுக்கு அதிபதியான இந்தியருக்கு வந்த சிக்கல்
கனடாவில் பிராம்டன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில், அவர் மீது லொட்டரி நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
பிராம்டன் பகுதியில் குடியிருப்பவர் ரோஷன்குமார் காந்தி. இவருக்கு லொட்டரியில் 62,000 கனேடிய டொலர் பரிசாக கிடைத்துள்ளது.
ஆனால் தொடர்புடைய நபர் OLG எனப்படும் லொட்டரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக பணியாற்றுகிறாரா என்பது தொடர்பில் மதிப்பாய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சில்லறை விற்பனையாளர்
அதாவது லொட்டரி வெற்றியாளர் ஒருவர், OLG எனப்படும் லொட்டரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக பணியாற்றுபவராக இருந்து, 10,000 கனேடிய டொலருக்கு மேல் பரிசாக வென்றால் அது மதிப்பாய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்பதை விதியாக கொண்டுள்ளனர்.
மேலும், அந்த லொட்டரிக்கு வேறு எவரும் உரிமையாளர்கள் உள்ளனரா என்பது குறித்து உறுதி செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.
அத்துடன், அவர் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக பணியாற்றுபவராகவும் இல்லை என்பது OLG தற்போது உறுதி செய்துள்ளது.
மேலும், அவர் வென்றுள்ள லொட்டரி தொடர்பில் இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில், பெப்ரவரி 10ம் திகதி பரிசு தொகையை அவர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் OLG நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |